
என் கனவுகளின்
கதாநாயகனே!!!
காதலின் சின்னம்
தாஜ்மகாலில் நடுநிசியில்
என்னுடன் கை
கோர்த்தவனே!!!
யமுனையின் தண்ணீர்
வற்றாமல் ஓடும்
அழகை ரசிக்க வைத்தவனே!!
விடிந்ததும்தான் தெரிந்தது,
கனவில் நீ என்னுடன்
தாஜ்மகால் கண்ண்டது!
யமுனையின் தண்ணீர்
ஏன் வற்றவில்லை
எனக்குப் புரிந்த்தது,
என்னைப் போல்
ஓராயிரம்
மும்தாஜ்களின்
கண்ணீர்தான் அது என்று!!