
என் கனவுகளின்
கதாநாயகனே!!!
காதலின் சின்னம்
தாஜ்மகாலில் நடுநிசியில்
என்னுடன் கை
கோர்த்தவனே!!!
யமுனையின் தண்ணீர்
வற்றாமல் ஓடும்
அழகை ரசிக்க வைத்தவனே!!
விடிந்ததும்தான் தெரிந்தது,
கனவில் நீ என்னுடன்
தாஜ்மகால் கண்ண்டது!
யமுனையின் தண்ணீர்
ஏன் வற்றவில்லை
எனக்குப் புரிந்த்தது,
என்னைப் போல்
ஓராயிரம்
மும்தாஜ்களின்
கண்ணீர்தான் அது என்று!!
4 comments:
கவிதை நன்று
பிழைகளைக் கொஞ்சம் கவனியுங்கள்
//ஓராயிரம்
மும்தாஜ்களின்
கண்ணீர்தான் அது என்று!!
/
இந்த கவிதையின் பின்னனியில்ல் இவ்வளவு மேட்டரு இருக்கா
நல்லாயிருக்கு வரிகள் அனைத்தும்
உங்கள் வலைப்பூ கண்களில் ஒற்றி கொள்ளலாம் போல் இருக்கிறது,பிளீஸ் நிறைய எழுதுங்களேன்
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment